இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில்
2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான
முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடித்த பதினேழு பேர் (17)
நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255) கடலட்டைகள் மற்றும் நான்கு (04)
டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி
நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்
வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை கடற்படை
கப்பல் வேலுசும நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் கல்முனை முனைக்கு அப்பால் மற்றும்
வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும்
அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம்
பிடித்த பதினேழு பேர் (17) நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255)
கடலட்டைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம்,
மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர், குருநாரு பன்னக்குறுப்பு மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில்
வசிப்பவர்கள் என 21 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த
சந்தேகநபர்கள், கடலட்டைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக
நடவடிக்கைகளுக்காக யாழ்பாணம் சட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம் இன்று ஆரம்பமானது. இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த...