நுவரெலியாவில் 2023ஆம் ஆண்டிற்குப் பின்னர் புலியொன்று உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா, நானுஓயா, பாம்ஸ்டன் தோட்டத்தில் கடந்த (27) புலி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நுவரெலியா வனவிலங்கு தளத்தில் 2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புலி மரணம் இதுவென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், மேலும் மற்றுமொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த விலங்கு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த விலங்கு 1-2 வயதுக்கு இடைப்பட்ட பெண் என்பதால் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு நுவரெலியா நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததையடுத்து பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.
மனித நடமாட்டத்தால் மலைப்புலிகள் பலியாகியுள்ள போதிலும், நுவரெலியா வனவிலங்கு தளத்தில் மலைப்புலிகள் குறித்த விழிப்புணர்வு காரணமாக மலைப்புலிகள் இறப்பது குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
