செம்பியன்பற்றில் JCB மூலம் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டதை ஒப்புக் கொண்ட கிராம அலுவலர்-சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் அண்மையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பெருமளவு நிலப்பரப்பில் காணப்பட்ட மரங்கள் JCB இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.
அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நபர் ஒருவர் அனுமதியற்று சட்டவிரோதமாக குறித்த இடத்தை சுவீகரிக்கும் நோக்குடன் இரவோடு இரவாக JCB மூலம் பெருமளவான காடுகளை அழித்துள்ளார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செம்பியன்பற்று வடக்கு மக்கள் பலர் அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட கிராம அலுவலர் உட்பட்ட அதிகாரிகள் குறித்த இடம் சட்டவிரோதமாக சுவிகரிக்கும் நோக்குடன் அனுமதியற்று காடுகள் அழிக்கப்பட்டது கண்டறியப்பட்டு
அப்பகுதி மக்களுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் கிராம அலுவலரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிக்கப்பட்டமை கிராம அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்ட போதும் சம்பந்தப்பட்ட நபர் அரச நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுவதால் அவருக்கெதிராக நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

