திருகோணமலை மாவட்டம் மூதூர் கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கணேசபுரம் பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து இன்று(30) காலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவர் என சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர், தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் வைத்து இடைமறித்து யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




