மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயதும் 2 மாதங்களும் ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணையில் தாய் வீட்டில் இருந்த போது, வீட்டிற்கு முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை தவறி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.