கோட்டை நீதவானாகச் செயற்படும் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு பிரதான நீதவான் திலின கமனே மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா கல்கிஸ்ஸை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.