• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆவேசம்!

admin by admin
December 4, 2024
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆவேசம்!
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த டிசம்பர் 1ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில், BN – NB – 9185 என்ற இலக்க அரச பேருந்து ஒன்று தரித்திருந்தது. நான் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் அவர்களிடம் வினவிய வேளை அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லும் என கூறி, என்னை பேருந்தில் ஏறுமாறு கூறினார்கள். அந்தப் பேருந்து நிலையத்தில் நான் பணத்தினை கொடுத்து பற்றுச் சீட்டினை பெற்றுக் கொண்டேன்.

பேருந்தில் ஏறி அமர்ந்த வேளை, தொடர் பிரயாணம் காரணமாக நான் கண்ணயர்ந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்தவேளை பேருந்து கிளிநொச்சியை வந்தடைந்து. என்னை கிளிநொச்சியில் இறங்குமாறு கூறினார்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு தானே பற்றுச்சீட்டு பெற்றுள்ளேன். ஆகையால் என்னை யாழ்ப்பாணத்தில் தானே இறக்க வேண்டும் எனக்கூறினேன்.

அதற்கு அவர்கள் இந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது. பின்னால் வருகின்ற பேருந்தில் சொல்லி இருக்கின்றோம். அதில் ஏறுங்கள் அவர்கள் உங்களை யாழ்ப்பாணத்தில் இறங்குவார்கள். இந்த பற்றுச்சீட்டை பயன்படுத்தி செல்லலாம் என எனக்கு கூறினர். அந்த பேருந்து கிளிநொச்சி டிப்போவிற்கு சொந்தமானது என்றபடியால் டிப்போவிற்கு சென்றது.

நானும் இறங்கி வீதியில் நின்றவேளை சிறிது நேரம் கழித்து கண்டி பேருந்து ஒன்று யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நானும் அந்த பேருந்தில் ஏறிவிட்டு, முன்னர் எடுத்த பற்றுச்சீட்டினை காண்பித்தேன். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள் பற்றுச்சீட்டு பெறவேண்டும் என்று கூறினர். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் மீண்டும் 260 ரூபா செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தேன். மொத்தமாக 766 ரூபாவை இந்த பயணத்திற்காக செவழித்தேன்.

இவ்வாறான செயற்பாடுகள் கொழும்பு பேருந்துகளிலும் இடம்பெறுவதாக பின்னர் அறிந்து கொண்டேன். கொழும்பில் இருந்து புறப்படும் கொழும்பு – வவுனியா இடையேயான போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பதாக பொய்கூறி பயணிகளை ஏற்றிவிட்டு அவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டு அலைக்கழிப்பதுடன் அதிக செலவுகளையும் ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறு பயணம் செய்கின்றவர்கள் மேலதிக பணம் இல்லாவிட்டால் அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்றைக்கு நாடு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் ஒரு பயணத்திற்காக இரண்டு தடவை பற்றுச்சீட்டினை பெறுவதென்பது ஒரு மோசமான விடயம். இவ்வாறான செயற்பாடுகளானது அரச போக்குவரத்து சபையானது மக்கள் மீது அக்கறை காட்டாமையையும், ஏமாற்றுவதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இதுகுறித்து முறைப்பாடுகள் செய்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை என்று கூறினாலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன. எனவே இதற்கு இலங்கை போக்குவரத்து சபை, வடக்கு மாகாண ஆளுநரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

பெண் ஒருவரைக் காணவில்லை.!

பெண் ஒருவரைக் காணவில்லை.!

by Mathavi
June 8, 2026
0

மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை. எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 0740869024, 0701921595 எனும்...

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

by selvan
June 8, 2026
0

"வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும்...

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

by selvan
June 8, 2026
0

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

by selvan
June 8, 2026
0

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

சலே விவகாரம்; நாமல் காட்டம்.!

by Mathavi
June 8, 2026
0

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள், உயிர்த்த...

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

by selvan
June 8, 2026
0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

by selvan
June 8, 2026
0

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி அக் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) காலை...

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

by selvan
June 8, 2026
0

மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம்...

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம்...

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி