இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை – கொட்டாவ வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.