தமிழ் அரசு கட்சியின் ஆதரவின்றி இலங்கையை யாரும் வழிநடத்த முடியாது _திருகோணமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தின நிகழ்வில் கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான்! (படங்கள் இணைப்பு)

0 126
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை (27) ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது  திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன்,எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் தமிழ் அரசு கட்சியின் ஆதரவின்றி இலங்கையை யாரும் வழி நடத்த முடியாது. இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கட்சி வட கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களினதும் கொள்கை தீர்மானங்களில் சரியாக வழிநடாத்தினார்கள். தந்தை செல்வா அரசியலில் ஆரம்பம் முதல் இறுதி மூச்சு வரை திறம்பட செயற்பட்டவர். தந்தை செல்வாவின் கொள்கை இன்னும் வாழ்கிறது சௌமிய தொண்டமான் ஆறுமுகம் தொண்டமானுடன் பழகியவர்.தந்தை செல்வாவின் சிலையை திருகோணமலையில் அமைத்து தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து பயணிப்பேன் என்றார்.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேன்காமம் குள ஆக்கிரமிப்பு பெரும்பான்மை சமூகத்தினரால் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் தமிழ் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதனை இங்கு ஆளுனர் முன் கூறுகிறேன் இது விடயத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என நடக்கலாம். தமிழ் அரசு கட்சியின் தீர்மானம் இந்த தேர்தலில் சரியாக இருக்க வேண்டும் இந்த தேர்தல் தொடர்பில் எம் மக்களையும் மண்ணையும் பாதுகாப்பதில் கட்சிக்கு பாரிய பொறுப்பு உள்ளது.தந்தை செல்வாவின் தொலை நோக்கில் இணக்க அரசியலில் செல்ல வேண்டும். முன்னர் இருந்த ஆளுனர் அநுராதா யஹம்பத் சில திட்டங்களை மாற்றி விட்டு சென்றுள்ளார் தீர்வின்றிய நிலையை உருவாக்கி விட்டார். நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலில் மாற வேண்டும்

இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பண்டா செல்வா டட்லி செல்வா ஒப்பந்தத்தில் சுயாட்சி பற்றி சொல்ல வில்லை .கட்சியினுடைய பாரம்பரியத்தை நினைக்கையில் தேசத்தினுடைய தந்தையாக அரசியல் அனுகுமுறையை பார்க்கிறோம்.தந்தை செல்வாவின் அரசியலை மீண்டும் ஒரு படித்து பார்க்க வேண்டும் அப்போது தான் நேர்மை கண்ணியம் அரசியல் விடுதலை என்பது புரியும் .எண்ணிக்கை குறையாமலும் நிலம் பரிபோகாமலும் இருக்க வேண்டும் என்பதே செல்வாவின் கருத்துப்படி இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.