யாழ் நகரில் வீடுடைத்து 13 பவுண் நகை திருடியவர் கைது!

0 19

யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது

யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் அவர்களின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான அணியினர் குறித்த திருட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட 23 லட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் நகையினையும் 2 லட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்,

கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

IMG 20240202 WA0097 IMG 20240202 WA0098

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.