யாழில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால் பொது போக்குவரத்துக்கு இடையூறு

0 18

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியில், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது நடந்து, மோட்டார் சைக்கிள் மூலம், முச்சக்கர வண்டி மூலம் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டதால் வீதியில் செல்லும் பயணிகள் போக்குவரத்து செய்வதற்கு மிகவும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்துடன் வாகனங்களில் பேரணியில் ஈடுபட்டவர்கள் அதிக சத்தமாக ஹோர்ன்களை ஒலிக்க வைத்து ஒலி மாசுபடுதலை ஏற்படுத்தினர்.

இதனை சீர் செய்வதற்கு பொலிஸார் களமிறக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வீதியால் பயணித்த பயணிகள் குறித்த பேரணியை கடிந்தவாறு சென்றதை அவதானிக்க முடிந்தது

IMG 20240204 WA0100 IMG 20240204 WA0102 IMG 20240204 WA0098 IMG 20240204 WA0096

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.