மஸ்கெலியாவில் – போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு.!

0

இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பீ, எம், டி, கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உட்பட நலன் விரும்பிகள்  இணைந்து, மஸ்கெலியா பிரதேசத்தை போதைப் பொருள் அற்ற பகுதியாக மாற்ற ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி பாடசாலைப் பகுதியில் மதுபான விற்பனை,போதை மாத்திரை, வாசனைப் பாக்கு, புகையிலை, மூக்குப் பொடி மற்றும் ஆயுர்வேத குழிகைகள் விற்பனை செய்யக் கூடாது எனவும், அவ்வாறு விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மாணவர்கள் இடையே போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எ, எஸ்,பி.ஜயசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.