மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!

0

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின   நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
DSC 0038

WhatsApp Image 2024 02 04 at 11.21.27 AM (1)
இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை 8.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்வு ஆரம்பமானது.

மன்னார் பொலிஸார்,பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து அணிவகுப்பு மரியாதையை முன்னெடுத்தனர்.

மன்னார் பிரதான பாலத்தடியில் ஆரம்பமான அணிவகுப்பு மரியாதை மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. குறித்த அணிவகுப்பு மரியாதையை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முப்படை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
DSC 0027
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தேசியக்கொடியை ஏற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது . நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு 2 நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது. பின்னர் சமாதான புறாக்கள் மற்றும் சமாதான பலூன்கள் பறக்கவிடப்பட்டதுடன், சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளும்  சர்வமதத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
WhatsApp Image 2024 02 04 at 11.21.26 AM

அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டதுடன் மாவட்ட செயலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.