மணல் அகழ்வை நிறுத்தக் கோரி அம்பனில் மக்கள் போராட்டம்.!

78

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை  தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 9:00 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்பிருந்து ஆரம்பமான போராட்டம் மணல் அகழ்வு நடைபெறும் இடம் வரை சென்று கொண்டிருக்கிறது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு வருகின்றனர். 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் பர்ப்பில் நியமங்களுக்கு முரணாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒருசில ஈபிடீபி உறுப்பினர்கள் குறித்த மணல் அகழ்வு விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.