மக்களின் முதன்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் – அமைச்சர் டக்ளஸ்  அறிவுறுத்து!

0 14

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனை உச்சபட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன் படுத்துவதையே  தான் விரும்புகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகள் முதற்கொண்டு பொதுமக்களிடமும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலணைப் பிரதேச செயலகத்தில் இன்றையதினம்  இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை ஆரம்பித்து, தலைமை உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG 20240201 WA0105

IMG 20240201 WA0106

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.