பிறந்து இரண்டு மணத்தியாலங்களில் உயிரிழந்த சிசு!! பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணும் திடீரென உயிரிழப்பு!

0 11

குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அவர் 6 மாத காலம் கர்ப்பிணியாக காணப்பட்டார். இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் 24ஆம் திகதி வீடு திருப்பியுள்ளார்.

பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரண்டு மணத்தியாலங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.