டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்…!

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது தொடர்ச்சியாக நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த உரிமையாளர்கள் 07 பேர், கொக்குவில் பொது சுகாதார பரசோதகரின் பரிசோதனையில் சிக்கிக் கொண்டனர்.

இவர்களுக்குகெதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள், கொக்குவில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்டன. இன்றைய தினம் 07 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. எதிராளிகள் அனைவரும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதையடுத்து 07 பேருகும் 20,000/= தண்டம் விதிக்கப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் நீதிமன்றால் வழங்கப்பட்டது.

Comments are closed.