சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் சிவில் உடையில்  பணியாற்றும் ஊழியர்கள்..!

0

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.  இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களில் சிலர் சிவில் உடை அணிந்து  பணியாற்றுவதாக நுவரெலியா மாவட்ட தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமெனக் கோரி குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பெருமளவிலான நோயாளர்கள் சிகிச்சை பெற வந்திருந்த நிலையில் சுகாதார ஊழியர்கள் சிலர் இவ்வாறு சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட  அனைத்து சேவைகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
IMG 20240201 WA0015

Leave A Reply

Your email address will not be published.