உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
IMG 20240206 WA0055

IMG 20240206 WA0049

IMG 20240206 WA0040
தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் இலட்சிணை கல்லூரி மாணவிகளான ஜோய்ஸ் பேலின் மயூரன், சாம்பவி சதீஷ் ஆகியோரால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.