இளைஞனின் காலை முறித்த பொலிசார்!! களத்தில் குதித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

0 17

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் இன்று(01) எம்மால் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்ப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

—-பின்னணி—-

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், தான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் வந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என்னை நில்லடா என கூறினார்.

எனக்கு அன்று காய்ச்சல் மெதுவாகவே சைக்கிள் பயணித்தேன் அவர் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கடா எனக் கூறினார் ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.

ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை என கேட்டார்கள். காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.

நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாறுமாறாக தாக்கி இரு பொலிசார் சேர்ந்து அருகில் இருந்த மதிலுடன் என்னை வீசி விட்டுச் சென்றார்கள்.

வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன் எனது ஒரு கால் முறிந்துள்ளது என்னை தாக்கிய போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.