Browsing: குறித்து

மன்னார் மாவட்டத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்    மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன்,சாள்ஸ் நிர்மலநாதன்,கே.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும்  இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண ஆளுநர் இறுதி […]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சி.சிறிதரனின் சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் – தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்! – என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய […]

இந்தியாவின் நாகப்பட்டினத்தையும் திருகோணமலை எண்ணெய்க் குதத்தையும் இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி வாரத்தினை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தேச எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் […]