Browsing: முக்கிய

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை (10) முதல் கோரப்பட உள்ளன. மேலும் 400இ000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. ‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம்இ சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர். இதேவேளைஇ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் […]

‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இதனை சபைக்கு அறிவித்த சபாநாயகர் மேலும் கூறுகையில், 2024 சனவரி 23 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 சனவரி 24 ஆம் […]

கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (ழுபுP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன. இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NயுP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (ஊளுழுள) சிவில் கூட்டு […]

எமது நாட்டில், கடநத 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு ‘தேசிய சுதந்திர தினம்’ என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற தினமாக கடந்து போயிருக்கிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாட்டின் தேசிய சுதந்திர நாளன்று தமிழர் தாயக […]

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு […]

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் […]

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை […]

கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய குறித்ந சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.