Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: முக்கிய
வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கலுகமுவ வீதியில் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத […]
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான […]
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் […]
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் 12.02.2024 நேற்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் […]
யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் […]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 12.02.2024 இன்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் இருந்த குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச […]
நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்இ மீண்டும் பணிப்புறக்கணிப்பில்இ நாளை (13) முதல் ஈடுபடவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.