Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: செய்திகள்
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது […]
கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையினால் 37 வயதான இரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தேவ, மேற்கு பொல்பஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 38 வயதான சுரங்கிகா நதிஷானீ எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் நேற்று பி.ப. 4.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது வீட்டுக்குள் நுழைந்து […]
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]
வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் […]
சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவனும் மனைவியும் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ – வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு விஷம் அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர். மனைவியின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக படுக்கையிலேயே உள்ள நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் […]
மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக மொனராகலை சிறைச்சாலை அதிகார சபைக்கு மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியை பெறும் என வௌியுறவு அமைச்சர் அலிசப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அமைச்சர், “1948 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டிய அந்நியச் செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இலங்கை அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் […]
நாட்டின் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியர்கள் பயிற்சியை முடித்ததும் நியமனம் வழங்கப்படும் என, சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரம் பயிற்சிகளை நிறைவு செய்த 90 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு குழாய்க்கிணறும் நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பொருண்மியம் நலிவுற்ற மற்றுமோர் குடும்பத்திற்கு டென்மார்க் அன்பர் முன்வந்து வழங்கிய நிதியில் கடந்த ஞாயிறு அன்று (4)நீர்த்தொட்டி அமைத்துக் கையளிக்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மைக்கல் நேசச்கர அமைப்பினர் இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.