Browsing: கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கி வழங்கிய நபரே கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி காலை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதத் தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவரே உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். ‘ கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். விசேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பின் போதே ) சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (31வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.

பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸார் தெரிவித்தார். திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி தெரிவித்தார். இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளியூரில் […]

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் 50 நாட்களுக்குள் 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ இன்றுடன் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. சந்தேக நபர்களில் 49,558 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 142 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், 208 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், 970 கிராம் கொக்கெய்ன், 2600 […]

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் -…