Browsing: ஏனையவை

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா ஊடாக அமெரிக்கா சென்றதை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். அவர், திங்கட்கிழமை (12) அதிகாலை 02.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-284 விமானத்தில் இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்று, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் செல்கிறார். மைத்திரிபால சிறிசேன அதே கட்சியைச் சேர்ந்த மேலும் இரு அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவர்கள் அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார். அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது பலதடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம்,  மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை […]

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 5, 2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான […]

NPP யின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகக் கூறும் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும் அங்கு மேலும் மேலும் ஆச்சர்யங்கள் ஏற்படும் என்றும் கூறினார். ‘எங்கள் இந்திய விஜயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவோ, ஜனாதிபதி ரணில் மூலமாகவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் மூலமாகவோ […]

பலாங்கொடை பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் குறித்த மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அட்டவணையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘மக்களின் வாக்குரிமையை அழிக்க முற்பட்டால் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற பெயரில் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்யும் குறும்புத்தனமான நோக்கங்களுக்கு சமகி […]

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டதில்இ சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கீழே […]