Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலக
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை
வேலை மாற்றம் முடிந்த பிறகு தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு,. நாட்டின் தொழில்துறை தொடர்பான பல சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, அதன் கீழ் “துண்டிக்கும் உரிமை” என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க […]
வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகிய அதிர்வினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளதுடன், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள். குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 […]
இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பலுசிஸ்தானின் பிஷினில் ஒரு சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை […]
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜெபஸ்டின் பினிரா ஹெலி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் […]
சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். இணையத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள் பிரபலமாக உள்ளபோதும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணமாகாத பல இளையர்கள் தொடர்ந்து பாரம்பரிய திருமணத் தரகர்களையே சார்ந்திருப்பதாக அவர் […]
இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னர் திங்களன்று ’வழக்கமான சிகிச்சையை’ தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொதுக் கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய…