Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது தொடர்ச்சியாக நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த உரிமையாளர்கள் 07 பேர், கொக்குவில் பொது சுகாதார பரசோதகரின் பரிசோதனையில் சிக்கிக் கொண்டனர். […]
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7) காலை பாடசாலைக்கு முன் குறித்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. […]
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது. இந்நிலையில் நேற்று குறித்த மாணவனை கைது செய்த […]
பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், பிரதான புகையிரத பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது. திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது கோபத்தில் ஒரு கைதி மற்ற கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான கைதி தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
“அவலோகிதேஸ்வர போதிசத்வா” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தான் புத்தரின் அவதாரம் என்று கூறிக்கொண்ட இவர், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளன. பத்து யானைகள் அடங்கிய குறித்த யானைக் கூட்டம், இன்று புதன்கிழமை காலைவேளையில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. அதேவேளை, அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.62 ஊழியர்களை பணி நீக்கம் செய்தமை, ஊழியர்களின் இடமாற்றம், மின்பட்டியல் விலை அதிகரிப்பு, சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சட்டவிரோதத் தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவரே உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். ‘ கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.