Browsing: இலங்கை

மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில் குறித்த அவுஸ்திரேலியா பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் கடுகண்ணாவை என்னும் பிரதேசத்தில் இயங்கும் மசாஜ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (09) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும். அதன் பின்னர் கடுகண்ணாவை பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்ப்பாட்டினை செய்துள்ளதாக பொலிஸார் […]

வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம்  சுற்றி வளைக்கப்பட்டதுடன்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது இந்த இரண்டு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் 11.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அவர் சமூக ஊடகங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசினார். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ரூபா 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதற்காகத்தான் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பரப்புரைகள் அரசை […]

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதியுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் போரட்டம் கருணா பிள்ளையானின் உச்சகட்ட பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது அவ்வாறு மீண்டும் பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காக செயற்பட்டுவரும் போலி முகங்களை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும். அதேவேளை சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்படவேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இன்று […]

நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். “நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எக்காரணம் கொண்டும் […]

பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் வினைத்திறன் இன்மையினால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக இந்த மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது வெலிசர, வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் உள்ள […]

இவ் வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொசவிற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் அண்மித்து வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது சதொச சிறப்பங்காடிகளிலும், சில்லறை வர்த்தக நிலையங்களிலும் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேநேரம், திங்கட்கிழமை (12) முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை ரூ. 65க அதிகரிக்கலாம் என […]