Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா, பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை.

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை. நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் […]

கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய சிவிலியன் போக்குவரத்துக் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்” என்று அழைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. ரஷ்ய ரோந்துப் படகுகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலைத் தடுத்ததாகவும், ஒரு உக்ரேனிய கடற்படை ஆளில்லா விமானத்தை பீரங்கித் தாக்குதலால் அழித்ததாகவும், மீதமுள்ளவற்றை மின்னணுப் […]

மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று (10) வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர் குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்திருந்தனர்.   இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் […]

நேற்று நடைபெற்றுள்ள யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற்றுள்ள ஹரிகரன் ஸ்டார் நைட் இசை நிகழ்ச்சியில் இந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பின்னணிப்பாடகர் ஹரிகரன் தனது முகநூல் பதிவில், உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை உண்மையிலேயே வெளிப்படுத்தியது. ஒன்றாக, நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் கொண்டாடினோம். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்த கலாமாஸ்டர்  மற்றும் இந்திரகுமார் பத்மநாதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு கணத்திற்கும் நன்றி என […]

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இது போன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையின் உள்ள வனராஜா தோட்ட பகுதியில் உள்ள பாரிய வாகை சரிந்து விழுந்தது அதனால் அவ் வீதியூடாக வாகனங்கள் போக்குவரத்து சில மணி நேரம் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அந்த இடத்தில் சாய்ந்த பாரிய மரத்தை வொட்டி அகற்றினர். அனைத்து தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு […]

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள். இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென […]

அனுமதிப் பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.  புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.  இரண்டு டிப்பர் வாகனத்தினதும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வானத்தினையும் பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர்  கைது செய்யப்பட்ட நபர்களையும், […]