Browsing: யாழ்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்தியப் பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். இன்று மதியம் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா […]

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் […]

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.

Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று(6) யாழ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த […]

தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை […]

வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை சித்திரவதை புரிந்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ். பல்கலை கழக மாணவன் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழிமறித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி வீதியில் வைத்து தாக்கியதாகவும் , பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அறை ஒன்றில் வைத்து தன்னை தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருந்தார். […]

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் […]

வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு  குழாய்க்கிணறும்   நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பொருண்மியம் நலிவுற்ற மற்றுமோர் குடும்பத்திற்கு டென்மார்க் அன்பர் முன்வந்து வழங்கிய நிதியில் கடந்த ஞாயிறு அன்று (4)நீர்த்தொட்டி அமைத்துக் கையளிக்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்  மைக்கல் நேசச்கர அமைப்பினர் இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை இன்றையதினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]