வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை சித்திரவதை புரிந்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ். பல்கலை கழக மாணவன் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழிமறித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி வீதியில் வைத்து தாக்கியதாகவும் , பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அறை ஒன்றில் வைத்து தன்னை தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் , வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமை , ஆசியர்கள் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி , அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே இளைஞனை பொலிஸார் மறித்ததாகவும் , அதன் போதே இளைஞன் பொலிஸாருடன் தர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் , பாடசாலை ஆசிரியர்கள் மாணவிகளிடம் வாக்கு மூலங்களை பெற்று , இளைஞனை கைது செய்து , நீதிமன்றில் மறுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.