Browsing: யாழ்

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]

தென்னிந்திய நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் உள்ளிட்டவர்கள்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில்  தென்னிந்திய கலைஞர்கள்  யாழ்ப்பாணத்தை  வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா,நடன இயக்குனர் கலா மாஸ்டர்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  […]

யாழ் மாவட்ட கிராமிய  கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடாத்தினர். இதன்போது, மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர்கள், அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு “அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல்” நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட […]

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை  தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்பிருந்து ஆரம்பமான போராட்டம் மணல் அகழ்வு நடைபெறும் இடம் வரை சென்று கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு வருகின்றனர். 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் […]

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். […]

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைதீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]

தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர். இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக […]

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின்  இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 01.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், நாளை 09.02.2024  தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 10.02.2024 மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். தேர்த்திருவிழாவுக்காக, பல்வேறு இடங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.