Browsing: இலங்கை

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி […]

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை தடையின்றி முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகப்பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும்பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் பட்சத்தில் வளர்ச்சிபாதிக்கப்பட்டமை,நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை […]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று நிறைவடைகின்றன. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று  விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் ​போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் மூவர் சிரேஷ்ட பிரஜை ஒருவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவமொன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. கொட்வின் பெரேரா என்ற 81 வயதான சிரேஷ்ட பிரஜை ஒருவரிடமே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அதேபோன்று, நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரருக்கும் பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு, கொட்வின் […]

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் […]

ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு நேற்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர். பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை  உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச்  சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து […]