27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதியானால் என்ன செய்வேன் ? அதிரடிகளை வெளியிட்ட அநுரகுமார

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க AKD தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.

ஜால பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.“எமக்கு வெற்றி கிடைத்தால் ஆரம்பத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றம் நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என சிலர் கேட்கின்றனர்.கவலைப்பட வேண்டாம்.

நாம் அரசியலமைப்பு ரீதியாக நாட்டை ஆள்வோம். இதற்கிடையில் ஒரு விடயம் என்னவென்றால், நான் ஜனாதிபதியாகும்போது,

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருக்கும், அதற்கு ஒருவர் வரலாம்.

பாராளுமன்று உறுப்பினர்கள் மூவருடன் நானும் நான்கு பேர். 4 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும்.

அது சாத்தியமில்லை என்றால், அனைத்தையும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரலாம்.

இந்த பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை இங்கு உறுதிப்பட கூறுகிறேன்” என்றார்.

Related posts

Elate finds room and another gear in Beldame victory

Thinakaran

மிரிஹானவில் சடலங்கள் மீட்பு.!

sumi

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவல் !

User1

Leave a Comment