27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“சஜித் பிரேமதாச மிக சிறப்பாக ஆங்கிலம் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். அவரின் ஆங்கிலப் புலமை குறித்து நாம் விவாதிக்கவில்லை.

சஜித் பிரேமதாச எவ்வளவு சிறப்பாக ஆங்கிலம் பேசுவார் என்றால் அவர் பாடம் நடத்திய வகுப்பிற்கு கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியரே வருகை தருவார்” என சாடியுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில்,

“விவசாயத் துறையை மேம்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் அதிகரிப்பதே எமது முதல் திட்டம் ஆகும்.

இரண்டாவதாக வரிச்சுமையை இலகுவாக்க வேண்டும். அதனையடுத்து பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றமடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும். அதனையடுத்து, அஸ்வெசும உரிமையை பாதுகாப்பது எங்களின் திட்டமாகும்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரம் விரிவடையும் போது நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். இதன்மூலம், வரிச்சுமையை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு

sumi

புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு..!

sumi

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

User1

Leave a Comment