27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு?

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை மீண்டும் தலை தூக்கியதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையால் வடமராட்சி கிழக்கு கடலில் மீன்வளம் அதிகரித்து மீன்களின் விலையும் பாரியளவு உயர்ந்து நாகர்கோவில் தொடக்கம்-வெற்றிலைக்கேணி வரையான சிறு தொழிலாளர்கள் கணிசமான வருமானத்தை ஈட்டிவந்த நிலையில் கட்டைக்காட்டில் மீண்டும் சட்டவிரோத தொழில் தலை தூக்கியுள்ளது.

நேற்று 06.09.2024 ஐம்பதிற்கும் மேற்பட்ட படகுகள் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்ததை கடற்படை அவதானித்தும் அவர்களை கைது செய்யவில்லை.கடற்படையை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை 

நாளுக்கு நாள் முப்பதாயிரம் கிலோ மீன்களுக்கும் அதிகமாக ஒளி வைத்து பிடிப்பதால் வடமராட்சி கிழக்கு சந்தைகளில் 230 ரூபாய்வரை காணப்பட்ட சாளை மீன் கிலோ ஒன்றின் பெறுமதி இன்று 06.09.2024 சந்தைகளில் 30-50 ரூபாயாக காணப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்வதை நிறுத்துமாறு கடற்படைக்கு முக்கிய கட்சி ஒன்றின் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத தொழிலை இதுவரை நிறுத்த முடியாமல் காணப்படுவது கடற்தொழில் அமைச்சரின் முக்கிய சாதனைகளில் ஒன்றெனவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

User1

திருகோணமலையில் “எரோ பேஸ் 2024” கண்காட்சி ஆரம்பம்

User1

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீவிர முயற்சியில் ரணில் அரசாங்கம்

User1

Leave a Comment