28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று முன்தினம் ஆரம்பமானது.

ஆயிரத்து 500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர்.

தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள மாவட்ட தேர்தல்கள் பணிமனையில் வாக்களிக்க முடியும். தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் பணிமனையில் முறைப்பாடளிக்கலாம்.

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களால் அவர்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, அனைவரும் பொறுப்புடன் தேர்தல் சட்டத்துக்கு அமைய செயல்பட வேண்டும். தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வாக்கெடுப்பு நிறைவடைந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளோம். தவறான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related posts

வௌ்ளப்பெருக்கு குறித்து முக்கிய அறிவிப்பு

User1

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை

User1

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

sumi

Leave a Comment