திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு,
புதிய நிர்வாகிகள் தெரிவும், டீ சர்ட், ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கிண்ணியா பீச் ரெஸ்ட் ஹவுஸில் (17) காலை 9:00 மணிக்கு நடைபெற்றது.
திருமலை மீடியா போரத்தின் தலைவர் எச் எம் ஹலால்தீன் தலைமையின் கீழ் நடைபெற்றது இந்நிகழ்வில் அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் எம் கனி,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகையதீன் பாவா, சிவில் இன்ஜினியர் ஏ எஸ்.ஷபான் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊடகத்துறைல் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க கோவைகள், எவ்வாறான செய்திகளை மக்களுக்கு பகிர வேண்டும், சமூகத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முதலான விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை திருகோண மலை மாவட்ட ஊடகவியலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து சரியான முறையில் செயல்பட வேண்டும் அப்போதுதான் உண்மையான செய்திகளை வெளிப்படுத்த முடியும் என்ற கருத்தினை அதிதிகள் முன் வைத்தனர்.
சுமார் 35 ஊடகவியலாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் திருமலை மீடியா கோரத்தில் ஊடகவியலாளர்களுக்கான மேலங்கி, ஊடக அடையாள அட்டை என்பன வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளும் தெரிவும் இடம்பெற்றது.