• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! வழங்கப்பட்டுள்ள அனுமதி

admin by admin
August 13, 2024
in Uncategorized
0
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! வழங்கப்பட்டுள்ள அனுமதி
Share on FacebookShare on Twitter

அரச சேவையின் சகல துறைகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய சேனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அரச அதிகாரிகள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆராய்ந்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மேற்படி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  முன்மொழிவுகளுக்கு கொள்கை அங்கீகாரம் வழங்குவதற்கும் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, 

• ஒட்டுமொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி ஒவ்வொரு வகுதிக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் ( SLQF ) மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் ( NVQ ) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப்பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களை கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை உபவகுதிகளுக்கு வகைப்படுத்தல்.

• ஆரம்பநிலை சேவை வகுதிகளுக்கும் ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவைத் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறையமையைப் பின்பற்றுதல்.

• ஏனைய அனைத்துச் சேவை வகுதிகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்;ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல்.

• அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்குவிதிகளை துரிதமாகத் திருத்தம் செய்தல்

2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000ஃ- ரூபாவை வழங்கல்.

• அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24% வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக ரூபா 55,000/- வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல்.

• அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல். • 2030 ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ (1,000,000) அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய, 2025 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல் ( Digitalization ) மற்றும் தன்னியக்க ( Automation ) முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை ( E- Governance ) அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல்.

• அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபா மாதாந்தப் பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.

• இயன்றவரை வெளியகச் சேவைகள் ( Outsourcing ) போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்வான வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல்.

• அடையாளம் காணப்பட்ட திணைக்களங்கள் ஃ கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக ( Public Liability Company ) மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துதல்.

 தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல்.

• 2020 அம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்.

• ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50மூ வீதத்திற்குச் சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்.

• தற்போது காணப்படுகின்ற வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவத்தி, இச்சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025.01.01 தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல். 

Related Posts

முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!

முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!

by selvan
June 21, 2026
0

இலங்கையில் நடைபெற்ற இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இந்திய A அணி சேம்பியனாகியுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மனுத் தாக்கல்!

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மனுத் தாக்கல்!

by selvan
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி...

சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!

சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!

by selvan
June 10, 2026
0

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

by selvan
June 10, 2026
0

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில்...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!

by Mathavi
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி...

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

by selvan
June 5, 2026
0

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது...

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

by selvan
June 5, 2026
0

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன், லோகேஷ் கனக​ராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர்...

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.!!

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.!!

by selvan
June 3, 2026
0

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று(02) மாலை 2.30 மணியளவில் வவுனியா குறிசுட்டகுளத்திலுள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை...

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

by selvan
June 1, 2026
0

சைப்பிரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில்...

கடலில் மாயமாகிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

by selvan
May 31, 2026
0

ஹம்பாந்தோட்டை யில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன 3 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது 3...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி