எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கும் நிலையில் இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.
சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளது.