அநுராதபுரத்தில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குமுதினி என்ற 60 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் பிள்ளைகள் மூவரும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த வயோதிப பெண் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அயல் வீட்டார்கள் இது தொடர்பில் வயோதிப பெண்ணின் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வயோதிப பெண்ணின் பிள்ளைகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வயோதிப பெண் சடலமாக இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.