வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இருந்து சற்றுமுன் சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி பெருமளவான மீன்களை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை தொழில் கடற்படையின் ஆதரவுடன் இடம்பெறுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாளாந்தம் ஐம்பதுக்கும் அதிகமான படகுகள் சட்டவிரோத தொழிலுக்கு செல்கின்ற போதும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஒரு சில படகுகளை கைது செய்து விட்டு சிறு தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நாற்பதாயிரம் கிலோ மீன்களுடன் படகுகள் கரைக்கு வந்த போதும் ஒரு சில படகுகள் கைது செய்யப்பட்ட போதும் சில படகுகள் விடுவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட படகுகளே இன்றும் சட்டவிரோத தொழிலுக்கு கடலுக்கு சென்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
வெற்றிலைக்கேணி கடற்படையின் ஆதரவுடன் தான் கட்டைக்காட்டில் சுருக்கு வலை இடம் பெறுவது தற்போதை வீடியோ ஆதாரம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இனி கடற்படையை நம்பி பிரியோசனம் இல்லை என்று கூறிய மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.