திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வொன்று இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் கலந்து கொண்டு ஆரம்ப உரையினை முன்வைத்தனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் வளவாளர்களாக கலந்து கொண்டவர்கள் தெளிவுபடுத்தினர்.
இதில் வளவாளராக மாவட்ட உளசமூக உத்தியோகத்தர்கர் எம். எம். எம். சம்சீத், மூதூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாபி மற்றும் பதில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். ரியால் ,கிண்ணியா பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹஸ்மி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வரும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.