தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை (21) கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
படோவிட்ட பாலத்திற்கு அருகில் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த 10ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து மின் உபகரணங்கள், 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.