28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் உயிரிழந்தவரும், உயிருடன் உள்ளவர்களும் நேற்று (3) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும் உள்ளாடைகளுடன் கடற்படை வீரர்கள் அழைத்துச் சென்று விசாரித்ததாக உயிர் தப்பி வந்த இந்திய கடற்றொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற கடற்றொழிலாளர் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற கடலில் கடற்றொழிலாளி மாயமாகி உள்ளார். மேலும் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய கடற்றொழிலாளி ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இறந்தவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர். உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு எடுத்து வந்து இராமேஸ்வரம் கடற்றொழில் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related posts

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது !

User1

தந்தை மீது புகாரளித்த 5 வயது சிறுவன் – என்ன காரணம் தெரியுமா?

User1

03 சீனப் போர்க்கப்பல்களும் இந்தியப் போர்க்கப்பல் ஒன்றும் கொழும்பில் !

User1

Leave a Comment