இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலருக்கு போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிய மனுவை யாழ்ப்பாண பதில் நீதவான் பா.தவபாலன் இன்று(03) நிராகரித்தார்.
பதில் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற பொலிஸார் தடை மனுவை சமர்பித்தபோதும்,
போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு உரித்துண்டு. சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை நடத்த முடியும் என பதில் நீதவான் தெரிவித்தார்.
76 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர தினத்தை கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள் நடைபறாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.