உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.

இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி தூதரக கேட்போர் கூடத்தில் உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா,கண்டி, மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உதவி இந்திய ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் அங்கு பேசிய போது கடந்த 30 ஆண்டுகளில் இந்திய நாட்டின் வளர்ச்சி பற்றிய விபரங்கள் எடுத்து கூறினார்.

இந்தியா இலங்கை அன்டை நாடாகவும் நட்பு நாடாகவும் இருந்து வருகிறது.

எமது இந்திய அரசு இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை அவ்வப்போது வழங்கிவருகிறது.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடமைப்பு திட்டம், வைத்திய சாலை திட்டம், பாடசாலைகள் அமைக்கும் திட்டம், போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு உதவி வருகிறது.

குறிப்பாக 10000 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் 1300 வீடுகளுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் உள்ளது.

2017 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பல சவால்களை சந்திக்க நேரிட்டு தற்போது வேகமாக பணி இடம்பெற்ற நிலையில் உள்ளது.

10000 வீட்டு திட்டம் 2017 ல் ஆரம்பித்தாலும் பல்வேறு உலகலாவிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமானது

குறிப்பாக 2019 ம் ஆண்டில் கொவிட் 19 , 2022 பொருளாதார நெருக்கடி, இதன் பின்னர் 2023 ல் நாடு நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.

எது எப்படியோ எங்கள் இந்திய அரசு மேற்கொண்டு வரும் 10000 வீட்டு திட்டம் மற்றும் ஏனைய அனைத்து திட்டங்களையும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0