• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!

Mathavi by Mathavi
July 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!
Share on FacebookShare on Twitter

பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு நெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தீவகத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுள் மிகவும் அற்புதமான – பெயர் சொல்லக்கூடிய திட்டமாக இந்த மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டம் அமைந்துள்ளதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் நிதியுதவியில், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் குறித்த மின் உற்பத்தி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும்போதே, ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரினால் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நெடுந்தீவின் வளர்ச்சியில் தொடர்ந்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்று மின்சாரம் இன்றி இருண்டு கிடந்த நெடுந்தீவிற்கு ஒளியூட்டும் நோக்கோடு 1996 ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மின்பிறப்பாக்கி ஒன்றினை எடுத்துச் சென்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மின்சாரப் பாவனையை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் 2001 ஆண்டு புனர்வாழ்வு அமைச்சராக இருந்த காலத்தில் மின்சார சபை மூலம் பாரிய மின்பிறப்பாக்கியை பொருத்தி தொடர்ச்சியான மின் விநியோகத்தினை உறுதிப்படுத்தினார்.

எனினும், மின்பிறப்பாக்கியை செயற்படுத்துவதற்கான எரிபொருள் கடல் வழியாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மின் உற்பத்திச் செலவு அதிகமா இருந்துவந்த நிலையில், கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக பணியாற்றிய டக்ளஸ் தேவானந்தா, தீவகத்திற்கு குறைந்த விலையில் நிலையான மின்சார விநியோத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

குறித்த திட்டத்தினை அரச – தனியார் கூட்டு முதலீட்டில் அமைப்பதற்கு தீர்மானித்த கடந்த கால அரசாங்கம், தனியாருக்கான விலைமனுக் கோரலை வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், சீனாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனத்திற்கு குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பூகோள அரசியல் விவகாரம் இருக்கின்ற நிலையில், தீவகத்தில் சீன நிறுவனத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குவது, இந்தியாவின் நலனுக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற கருத்தினை முன்வைத்த நிலையில் குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டது.

அதேவேளை, தீவகத்தில் முன்னெடுக்க திட்டமிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க கலப்புமுறை மின்சார உற்பத்தி திட்டத்திற்கு முழுமையான நிதியுதவி வழங்கி அதனை அமைத்து தருவதற்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது.

அதனடிப்படையில், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தினை அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

by selvan
July 2, 2026
0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச்...

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

by selvan
July 2, 2026
0

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி...

திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ  அஞ்சப்போவதில்லை!

திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ  அஞ்சப்போவதில்லை!

by selvan
July 2, 2026
0

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும்...

கிளிநொச்சியில் ” எல்நினோ ” காலநிலை தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தெளிவூட்டல்!

கிளிநொச்சியில் ” எல்நினோ ” காலநிலை தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தெளிவூட்டல்!

by selvan
July 2, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் குறித்த...

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!

by Mathavi
July 2, 2026
0

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூட்டம் ஒன்றை...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

by Mathavi
July 2, 2026
0

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.!

by Mathavi
July 2, 2026
0

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வீதி செப்பனிடும் பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.!

வீதி செப்பனிடும் பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.!

by Mathavi
July 2, 2026
0

ஹட்டன் பிரதான சாலையில் உள்ள மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான நெடுஞ்சாலையில் மௌசாகலை சந்திப்பிலிருந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை வரையிலான நான்கரை கிலோமீற்றர் நீளமுள்ள பகுதியை 590 மில்லியன்...

என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!

என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!

by Mathavi
July 2, 2026
0

சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும், சுரேஷ் சலேவினால் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!

யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!

by Mathavi
July 2, 2026
0

LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட "Learn, Play, Vote" (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி