கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது.!
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைக்குண்டுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.